திண்டுக்கல்: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் பீட்ரூட் ஒரு கிலோ 8-க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டி, காவேரியம்மாபட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், கேரளாவுக்கும் அதிகம் விற்பனைக்கு செல்கிறது. தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று ஒரு கிலோ பீட்ரூட் ரூ.8 முதல் ரூ.12 வரைக்கும் விற்பனையானது. விலை குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதேபோல், வரத்து அதிகரிப்பால் தக்காளி ரூ.6-க்கும், கத்தரிக்காய் ரூ.15-க்கும், பச்சை மிளகாய் ரூ.10 முதல் ரூ.15-க்கும் விற்பனையானது.