கள்ளக்கறிச்சி அதிர்ச்சி: ரூ.25 லட்சத்தில் புதிதாகக் கட்டப்படும் பேருந்து நிழற்குடை இடிந்து விழுந்தது!


கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அருகே உள்ள பகண்டை கூட்டுச் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பேருந்து பயணியர் நிழற்குடை, ரிஷி வந்தியம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையில் கட்டப்பட்டு வருகிறது.

80 சதவீத கட்டுமானப் பணி முடிவந்த நிலையில், கட்டுமானப் பணி நேற்றும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென கட்டுமான ம் சரிந்து விழுந்தது. கட்டுமானப் பொருட்கள் இடிந்து விழுந்தபோது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து ரிஷி வந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப் படும் பொருட்களை ஆய்வு செய்து, அதன் தரம் குறித்து ஒப்பந்ததாரரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x