சென்னை: ஆலங்குடி குருஸ்தலத்தை மேம்படுத்த ரூ.5.5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ ஆர். காமராஜ் (நன்னிலம்) ஆலங்குடி, வலங்கைமான் குருஸ்தலத்தை மேம்படுத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். அதற்கு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அளித்த பதிலில், ”ஆலங்குடி குருஸ்தலம் திருவாரூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் பேர் இந்த கோவிலுக்கு வந்து சென்றுள்ளனர். இதனை மேம்படுத்த 12 வகை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன” என்றார்.