திருச்சி: வீரமலைப் பாளையத்தில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால் இன்று முதல் ஏப்.10-ம் தேதி வரை 16 நாட்கள் அப்பகுதியில் பொதுமக்கள், கால்நடைகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அனியாப்பூர் கிராமம் வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கிச் சுடும் இடத்தில் இன்று (மார்ச் 26) முதல் ஏப்.10 வரை நாள்தோறும் காலை 7.30 முதல் மாலை 5.30 மணி வரை, பின்னர், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ராஸ் என்ஜினீயரிங் குரூப் அன்ட் சென்டர் பயிற்சியாளர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
எனவே, துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறும் 16 நாட்களும் பயிற்சி நடைபெறும் நேரங்களில் இப்பகுதியில் பொது மக்களும், மேய்ச்சலுக்காக கால்நடைகளும் நடமாடக் கூடாது என ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.