ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க போக்குவரத்து காவல்துறையினருக்கு காகித கூழ் தொப்பி மற்றும் மோர் வழங்கும் நிகழ்சசி இன்று நடைபெற்றது.
கோடை வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், போக்குவரத்து காவல்துறையினருக்கு உடல் ரீதியான நீர்சத்து குறைபாட்டை போக்கும் வகையிலும், தமிழக காவல்துறை கடந்த 2012ம் ஆண்டு முதல் கோடை காலத்தில் மோர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கோடை வெப்பத்தில் இருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை காத்துக்கொள்ளும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் காகித கூழ் தொப்பி மற்றும் மோர் வழங்கும் தொடங்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் காகித கூழ் தொப்பிகளை வழங்கி பாதுகாப்பாக பணியாற்ற அறிவுறுத்தினார். ராமேசுவரம் சரக கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி முன்னிலையில் மொத்தம் 23 காவலர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப் சிங், சார்பு ஆய்வாளர்கள் சதீஷ்குமார், ரவிவர்மா உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.