உதயநிதி கொடுத்த பட்டா இருக்கிறது; நிலம் எங்கே? - கள்ளக்குறிச்சியில் தவிக்கும் மக்கள்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கடந்த 2023 ஜூலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து, அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் சிலருக்கு அரசின் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி அடுத்த வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட 50 பேருக்கு அரசின் ஒப்படை பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடம் இதுவரை ஒதுக்கப்படாமலும், அளவீடு செய்யப்படாமலும் உள்ளதால் அரசு வழங்கிய பட்டா ஆவணத்திற்குரிய இடத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும் என வாணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

மனு அளித்த வாணாபுரத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கூறுகையில், “துணை முதல்வர் வந்த போது அழைத்துச் சென்று பட்டா வாங்கித் தருவதாக சொன்னார்கள். பட்டாவுக்கான ஆவணத்தையும் கொடுத்துவிட்டார்கள். ஆனால் இதுவரை பட்டாவுக்கான இடத்தை காண்பிக்கவில்லை. விரைவில் அளந்து கொடுக்க வேண்டும்" என்றார்.

x