அருப்புக்கோட்டை மேல்நிலை பள்ளி ஆச்சர்யம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பள்ளியில் கடந்த 1973-74ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாண வர்கள் 70-க்கும் அதிக மானோர் 50 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் நக்கீரன் கோபாலுக்கு வீரவாள் பரிசளிக் கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோபால் பேசுகையில், திருவிழாவுக்குச் செல்லும் குழந்தைகளைப் போல நான்கு நாட்களாக இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்தேன். பழைய கால நினைவுகளைக் கொண்டுவரும் கூட்டமாக இதைப் பார்க்கிறோம். அந்த பழைய வாழ்க்கை தற்போது கிடைக்காதா என ஏங்குகிறோம். பல விருதுகள் வரும் போகும். ஆனால், இந்த நாளைத் தான் உயரிய விருதாக கருதுகிறேன் என்றார்.

x