நாகை: தலைஞாயிறு பேரூராட்சி துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம், திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சியில் தலா 7 திமுக, அதிமுக உறுப்பினர்கள், ஒரு பாஜக உறுப்பினர் உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி பேரூராட்சித் தலைவராகவும், பாஜகவின் கதிரவன் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், பேரூராட்சித் தலைவர் செந்தமிழ் செல்வி தலைமையில் பேரூராட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணைத் தலைவர் கதிரவனை பதவி நீக்கம் செய்யும் வகையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்நந்து, துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில் லா தீர்மானம் குரல் வாக்கு எடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அந்தத் தீர்மானம் ஆட்சியரின் நடவடிக்கை க்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பாஜகவைச் சேர்ந்த துணைத் தலைவரை பதவியில் இருந்து நீக்க, ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வும் ஒன்றிணைந்து செயல் பட்டது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.