தமிழக அரசியலில் பரபரப்பு; திடீரென டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி - காரணம் என்ன?


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். அவரின் பயணத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில், அவர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவோடு இனி கூட்டணி கிடையாது என கடந்த மாதம் வரை திட்டவட்டமாக சொல்லிவந்த எடப்பாடி பழனிசாமி, சமீபத்தின் தனது நிலைப்பாட்டை மாற்றினார். திமுக மட்டுமே தங்களின் எதிரி, வேறு யாருடனும் கூட்டணி அமைப்போம் என அறிவித்தார். இதனையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படலாம் என்ற பேச்சு சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. மேலும், அவர் இந்த டெல்லி பயணத்தில் சில முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

x