கீழடி அகழ்வைப்பகத்தை பார்வையிட்ட வடிவேலு - ‘என் தாய் பிறந்த ஊர் என உருக்கம்’


சிவகங்கை: ‘எனது தாய் பிறந்த கீழடியில் உலகம் போற்றும் அகழ் வைப்பகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என நடிகர் நடிவேலு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழ் வைப்பகத்தை நேற்று நடிகர் வடிவேலு பார்வையிட்டார். அங்குள்ள தொல் பொருட்கள் குறித்த விவரங்களை, அவருக்கு கீழடி அகழாய்வு இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் ஆகியோர் விளக்கினர். அவருடன் சுற்றுலாப் பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கீழடி அகழ் வைப்பகத்தை கண்டு வியக்கிறேன். எனது தாய் பிறந்த கீழடியில், உலகம் போற்றும் அகழ் வைப்பகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு அமைத்து கொடுத்த முதல்வரை பாராட்டுகிறேன். இளைஞர்கள், மாணவர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மூத்த மொழியான தமிழை விட்டுத் தரக்கூடாது” இவ்வாறு அவர் கூறினார்.

x