பெருந்துறையில் ரூ.3.22 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது. கொப்பரை விலை புதிய உச்சத்தைத் தொட்டு, கிலோ ரூ.178-க்கு விற்பனை யானது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும் கொப்பரை ஏலத்தில், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கொப்பரை விற்பனையாகி வருகிறது. தேவைக்கு ஏற்ற வரத்து இல்லாத நிலையில், தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து கொப்பரை யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி பெருந்துறையில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோ ரூ.165-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த ஏலத்தில் கொப்பரை விலை புதிய உச்சத்தைத் தொட்டு கிலோ ரூ.178-க்கு விற்பனையானது.
பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் நேற்று முன் தினம் 4,096 மூட்டை கொப்பரை கொப்பரை வரத்தானது. இதில், முதல் தர கொப்பரை குறைந்த பட்சம் கிலோ ரூ.167.67, அதிகபட்சம் ரூ. 178, இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.67, அதிகபட்சம் ரூ. 175.15-க்கு விற்பனையானது. ஏலத்தில் மொத்தம் 1.91 லட்சம் கிலோ கொப்பரை ரூ.3.22 கோடிக்கு விற்பனையானது.