கடலூர் மாநகராட்சியில் கடும் நெருக்கடி தந்து வரி வசூலில் ஈடுபட்ட 2 வருவாய் உதவியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கடலூர் மாநகராட்சி ஆணையாளர் அனு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூர் மாநகராட்சிக்கு 2024-25-ம் காலத்திற்குரிய வரி மற்றும் வரியில்லா இனங்கள் வசூல் செய்ய அனைத்து வருவாய் உதவியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு குழுக்கள் அமைக்கப் பட்டு, குழுவாக சென்று நிலுவை வைத்துள்ள வரி விதிப்புதாரர்களை நேரில் சென்று கேட்கவும், பொதுமக்களிடம் அடிப்படை விதிகள் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு வருவாய் நிதி நிலையை எடுத்துக் கூறி நிலுவை வரியை வசூலிக்க முனைப்பான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிலையில் வரி வசூலில் ஈடுபடும் பணியாளர்கள் மிகவும் கடுமையாக நெருக்கடி செய்கிறார்கள் என்ற புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வருவாய் உதவியாளர்கள் சுசிலா, மகேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.