ஈரமான கையோடு சார்ஜ் போட்ட மாணவி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - நடந்தது என்ன?


சென்னை: ஈரமான கையால் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற 9ம் வகுப்பு மாணவி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகுந்தன். ஆட்டோ ஓட்டுநரான இவரது மூத்த மகள் அனிதா (14), எண்ணூர், கத்திவாக்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, ஈரமான கையால் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார்.

உடனே, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனிதாவை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், அனிதா ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த எண்ணூர் போலீஸார் அனிதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x