சிவகங்கை: விபத்தில் உயிரிழந்த மானாமதுரை காவலரின் குடும்பத்துக்கு ரூ.28.24 லட்சத்தை சக காவலர்கள் வழங்கி உதவினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜ கம்பீரத்தைச் சேர்ந்தவர் சசி வர்ணம் (43). இவர் மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து அவருடன் கடந்த 2003ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்த சக காவலர்கள் அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். ‘உதவி கரங்கள்’ என்ற பெயரில் குழுவை ஏற்படுத்தி பணம் வசூலித்தனர். மொத்தம் ரூ.28.24 லட்சத்தை ராஜ கம்பீரத்தில் உள்ள சசி வர்ணம் குடும்பத்தினரிடம் வழங்கினர்.