சென்னை: தமிழக காவல் துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட சென்னை காவல் கூடுதல் ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர், டிஜிபி அலுவலகத்தில் உள்ள பணியமைப்பு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஐஜியாக பணியாற்றிய எஸ்.லட்சுமி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பிரவேஷ்குமார், வட சென்னை காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.