கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் டாஸ்மாக் கடைகளில் பாஜகவிடனர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட ஸ்டிக்கரை ஒட்டினர். தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து, டாஸ்மாக் கடை மூடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் இல்லாததை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜாக சார்பில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் ஓட்டும் பேராட்டத்தை தமிழக பாஜக தலைமை அறிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் மு.க.ஸடாலின் படத்தை ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மேற்கு மாவட்ட மாவட்ட பாஜக சார்பில் இன்று (மார்ச் 20) மாலை சுமார் 4 மணி கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் உள்ள 2 டாஸ்மார்க் கடைகள் மற்றும் பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை ஆகியவற்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட ஸ்டிக்கரை ஓட்டினார். பின்னர் தமிழக அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடை மூட கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த நிகழ்வுக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் அர்ச்சனா ஈஸ்வர் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலர் அன்பரசன், முன்னாள் ஒன்றிய செயலர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.