உதகையில் பூத்துள்ள அரிய வகை பிரம்ம கமலம் மலர்கள்: பொதுமக்கள் ஆச்சர்யம்! 


உதகை: ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் உதகையில் உள்ள ஒரு வீட்டில் பூத்துக் குலுங்குகின்றன. அரிய வகை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் இம்மலர்களுக்கான மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

சுற்றுலா நகரமான உதகையில் உள்ள குல் முகமது சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிரம்ம கமலம் மலர்கள் இந்தாண்டு தற்போது பூத்துள்ளன. அந்த வீட்டுத் தோட்டத்தில் அரிய வகை நிஷா காந்தி எனப்படும் பிரம்ம கமலம் கள்ளிச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அழியும் பட்டியலில் உள்ள இவ்வகை செடிகளை கடந்த பல ஆண்டுகளாக பாதுகாத்து வளர்க்கப்பட்டுள்ள வரும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் தற்போது அரிய வகை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குகின்றன.

பெரும்பாலும் இவ்வகை மலர்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே பூக்கக்கூடிய நிலையில், தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ளது. தென் அமெரிக்கா நாட்டின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாகக் கொண்ட பிரம்ம கமலம் மலர்கள் இலங்கை நாட்டின் சொர்க்க பூ என அழைக்கப்படுகிறது. மலர்களின் இளவரசி என்றும் அழைக்கப்படும் பிரம்ம கமலம் மலர் உதகையில் உள்ள வீட்டு பூங்காவில் பூத்துள்ளதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து ரசித்து செல்கின்றனர்.

x