‘வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடக்கிறார்; நடவடிக்கை எடுங்கள்’ - சட்டமன்றத்தில் முதல்வர் கோபம்!


சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வேல்முருகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு, தமிழ்மொழி கல்வி குறித்து சட்டமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பினார். அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். தனது கருத்துகள் நீக்கப்பட்டதற்கு எதிராக இருக்கையிலிருந்து எழுந்து வந்து வேல்முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினார்.

இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ வேல்முருகன் அவையின் மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. சில நேரங்களில் வேல்முருகன் அதிகபிரசங்கித் தனமாக நடந்துகொள்கிறார்.எதிர் கருத்துகளாக இருந்தாலும் சரியாக தெரிவிப்பவர், இன்று இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. எனவே அவர் தன்னை திருத்துக்கொள்ளும் விதமாக அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேல்முருகன் அவையில் ஒருமையில் பேசியதையும், கை நீட்டி பேசியதையும் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்

x