சென்னை: நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வீரப்பனின் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். இந்நிலையில், இன்று வித்யாராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் விஜயலட்சுமி விவகார வழக்கில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையம் சென்றபோது, காவல் நிலையத்திற்குள் தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்று வித்யாராணியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்போது பரபரப்பை உருவாக்கியது.