‘ஹெச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி; தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது’ - சேகர்பாபு அதிரடி!


சென்னை: ஹெச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி, அவர் ஒரு மதவாத சக்தி. அவர் மதத்தால் மொழியால் மக்களை பிரிக்கிறார் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலை குறித்து பாஜகவின் ஹெச் ராஜா தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “ஹெச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி, அவர் ஒரு மதவாத சக்தி. அவர் மதத்தால் மொழியால் மக்களை பிரிக்கிறார்” என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்து இதுவரை 2700க்கும் அதிகமான கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, அமைச்சர் யார் என்ற கேள்வி இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோயில் விஷயத்தை திசை திருப்புகின்றனர். ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது. எதிர்பாராமல் நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது” என்றார்

x