போரூர் முருகன் கோயில் தேர் திருவிழாவில் குறிப்பிட்ட சபாவுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க முடியாது: உயர் நீதிமன்றம்


சென்னை: ​போரூர் முரு​கன் கோயில் தேர் திரு​விழா​வில், குறிப்​பிட்ட சபாவுக்கு மட்​டும் முன்​னுரிமை அளிக்​கும்​படி உத்​தர​விட முடி​யாது என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. சென்னை போரூர் பங்​குனி உத்​திர பால்​காவடி வேல் பூஜை சபா சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “போரூரில் உள்ள முரு​கன் கோயி​லில் பங்​குனி உத்​திர திரு​விழா 48-வது ஆண்​டாக ஏப்​.10-ம் தேதி நடை​பெறவுள்​ளது.

இந்த ஆண்டு பங்​குனி உத்​திர திரு​விழா​வின்​போது சபா சார்​பில் தேர் இழுக்​கும் திரு​விழா நடத்​த​வும், முன்​னுரிமை அளிக்​க​வும் அனு​மதி கோரி அறநிலை​யத் துறைக்கு மனு அளிக்​கப்​பட்​டது.

ஆனால் குறிப்​பிட்ட சபாவுக்கு மட்​டும் தேர் இழுக்க அனு​மதி வழங்கி முன்​னுரிமை அளிக்க முடி​யாது எனக் கூறி அறநிலை​யத் துறை மறுத்து விட்​டது. எனவே எங்​களது சபா சார்​பில் தேர்த்​திருவிழாவை நடத்த அனு​மதி வழங்க அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும்” என கோரப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்​ர​வர்த்தி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அறநிலை​யத் துறை சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கார்த்​தி​கேயன், “அந்​தக் கோயி​லில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் அறநிலை​யத் துறை தனி அதி​காரி மூல​மாக கோயில் விழாக்​கள் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்டு குறிப்​பிட்ட சபா சார்​பில் தேர் இழுக்க அனு​மதி வழங்க முடி​யாது” என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, “முரு​கன் கோயி​லில் வழி​பாடு நடத்​த​வும், முன்​னுரிமை கோர​வும் குறிப்​பிட்ட சபாவுக்கு மட்​டும் தனி உரிமை கிடை​யாது. சாதிய பாகு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு அனைத்து தரப்​பினரும் வழி​பாடு நடத்த உரிமை உள்​ளது. எனவே அனைத்து தரப்பு மக்​களும் பங்​கேற்று தேர் திரு​விழாவை நடத்​தலாம். அதில் மனு​தா​ரர் தரப்பு சபா​வும் கலந்து கொள்​ளலாம்” என உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​துவைத்​துள்​ளார்​.

x