திருவாரூர்: தென்னவராயநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று 64 குழந்தைகள் கொண்டைக்கடலையுடன் சத்துணவு சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 36 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏறபட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அனைத்து குழந்தைகளும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த ஆட்சியர் மோகன சந்திரன் சிகிச்சை பெறும் குழந்தைகளை பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார்.