திருப்பத்தூர் நகராட்சி அபாய் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவரது மனைவி சுகந்தி (21). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3-வதாக சுகந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று காலை 3 மாத பெண் குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை பெற்றோர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் 3-வதும் பெண் குழந்தை என்பதால் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருக்குமா ? என மருத்துவ துறையினர் சந்தேகத்தின் பேரில் திருப்பத்தூர் நகர காவல் துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.