தேவகோட்டை: தேசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தேர்வான தேவகோட்டை பள்ளி மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் தமிழக ஜூனியர் கைப்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் இருந்து 91 மாணவர்கள் பங்கேற்றனர். இதில தேவகோட்டைநகரத்தார் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் வீர மணிகண்டன் உள்ளிட்டோர் தேர்வாகினர். இந்த தமிழக அணி மார்ச் 26 முதல் மார்ச் 30ம் தேதி வரை பிஹார் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கைப் பந்துப் போட்டியில் பங்கேற்க உள்ளது.
தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர் வீரமணி கண்டனை சிவகங்கை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் கோபிநாத் மற்றும் பள்ளி நிரவாகத்தினர் பாராட்டினர்.