வாகன ஓட்டிகள் சிரமம்; சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்த தூத்துக்குடி எஸ்ஐ-க்கு பாராட்டு


தூத்துக்குடி: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி 4-ம் கேட் சாலையில் காணப்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வந்தனர். இதனைக் கண்ட அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாகம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம் தாமாக முன்வந்து அந்த பள்ளத்தை சரி செய்தார்.

அந்த பகுதியில் இருந்த மணலை மூட்டைகளில் அள்ளி பள்ளத்தில் கொட்டி சரி செய்தார். பள்ளம் சரி செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி சென்றனர். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டினர்.

x