சென்னை மாநகராட்சி மன்ற காங். தலைவர் பதவியை மகளிருக்கு வழங்குக: பெண் கவுன்சிலர்கள் கோரிக்கை


சென்னை: சென்னை மாநக​ராட்சி மன்ற காங்​கிரஸ் தலை​வர் பதவியை மகளிருக்கு வழங்க வேண்​டும் என்று காங்​கிரஸ் மகளிர் கவுன்​சிலர்​கள் கட்சியின் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கரிடம் கோரிக்கை விடுத்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்​சி​யில் காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த 13 கவுன்​சிலர்​கள் உள்​ளனர். அதில் 7 பேர் மகளிர். மாநக​ராட்சி மன்ற காங்​கிரஸ் தலை​வ​ராக எம்​.எஸ்​.​ திர​வி​யம் உள்​ளார்.

அண்​மை​யில் புதிய மாவட்ட தலை​வர் நியமனம் மற்​றும் விண்​ணப்​பம் விநி​யோகம் தொடர்​பாக தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்தகை அறி​விப்பு ஒன்றை வெளி​யிட்​டார். இதற்கு ஏராள​மான மாவட்ட தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், அவரை மாற்​றக்​கோரி மாவட்ட தலை​வரும், சென்னை மாநக​ராட்சி மன்ற காங்​கிரஸ் தலை​வரு​மான எம்​. எஸ்​.​திர​வி​யம் தலை​மை​யில் 20-க்​கும் மேற்​பட்ட மாவட்ட தலை​வர்​கள் டெல்லி சென்று முக்​கிய தலை​வர்​களை சந்​திக்க முயன்​றனர். பின்​னர் முடி​யாமல், கட்​சி​யின் தமிழகத்​துக்​கான மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கரை சந்​தித்​து, செல்​வப்​பெருந்​தகையை மாற்ற வலி​யுறுத்தி மனு அளித்​திருந்​தனர்.

இதனிடையே சென்னை மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 7 பேர் ஏற்​கெனவே செல்​வப்​பெருந்​தகையை சந்​தித்​து, எம்​.எஸ்​.​திர​வி​யத்​தை, மாநக​ராட்சி மன்ற காங்​கிரஸ் தலை​வர் பதவி​யில் இருந்து நீக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி இருந்​தனர்.

இதன் தொடர்ச்​சி​யாக தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில் நடை​பெறும் பல்​வேறு ஆலோ​சனை கூட்​டங்​களில் பங்​கேற்​ப​தற்​காக சென்னை வந்​துள்ள கட்​சி​யின் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கரை, காங்​கிரஸ் பெண் கவுன்​சிலர்​கள் சுகன்யா செல்​வம், அமிர்​தவர்​ஷினி, பானுபிரியா, தனலெட்​சுமி, சுபாஷிணி, சுமதி, சங்கீதா மற்றும் திலகர் ஆகியோர் நேற்று நேரில் சந்​தித்து மனு அளித்​தனர்.

அதில், எம்​.எஸ்​.​திர​வி​யம் மாநக​ராட்சி மன்ற தலை​வர் பொறுப்​பில் சிறப்​பாக செயல்​பட​வில்​லை. அவரை அந்த பொறுப்​பில் இருந்து நீக்​கி​விட்​டு, மகளிர் கவுன்​சிலர்​கள் அதி​க​மாக உள்ள நிலை​யில், மகளிருக்கே அப்​ப​த​வியை வழங்க வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்ளது. இதுகுறித்து கிரிஷ் சோடங்​கரிடம் செய்​தி​யாளர்​கள் கேட்​ட​போது, “இது உட்​கட்சி விவ​கரம். மகளிர் கவுன்​சிலர்​களின் கோரிக்​கைகள் குறித்து கட்சி மூத்த நிர்​வாகி​களு​டன் கலந்​தாலோ​சித்​து தீர்​வு காணப்​படும்​” என்​றார்​.

x