மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 425 கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 425 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 263 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 425 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 108.71 அடியாகவும், நீர் இருப்பு 76.59 டிஎம்சியாகவும் இருந்தது.

இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மாலை 1,200 கனஅடியாக குறைந்தது.

x