ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம்: பரந்தூரில் புதிய விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும் | தமிழக பட்ஜெட் 2025


சென்னை: ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சென்​னை, கோவை, மதுரை, திருச்சி மற்​றும் தூத்​துக்​குடி விமான நிலை​யங்​களின் விரி​வாக்​கத்​துக்கு உரிய நிலங்களை கையகப்​படுத்தி ரூ.2,938 கோடி மதிப்​புள்ள நிலத்தை இந்​திய விமான நிலை​யங்​கள் ஆணை​யத்​துக்கு தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. சேலம் விமான நிலை​யத்​துக்​கான ரூ.350 கோடி மதிப்​புள்ள நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

சென்​னைக்கு அருகே பரந்​தூரில் புதிய விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான பணிகள் விரைவுபடுத்​தப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில் தென் தமிழகத்​துக்கு சுற்​றுலாப் பயணிகளின் வரு​கையை அதி​கரிக்​க​வும், மாநிலத்​தின் பொருளா​தார வளர்ச்சி குன்​றிய பகு​தி​களின் ஒட்​டுமொத்த முன்​னேற்​றத்​துக்​காக​வும் ராம​நாத​புரம் மாவட்​டம், ராமேசுவரம் பகு​தி​யில் புதிய விமான நிலை​யம் அமைக்​கப்​படும்.

தமிழரின் கடல் மரபை மீட்​க​வும், தமிழகத்தை உலகளா​விய கப்​பல் கட்​டும் மைய​மாக நிறு​வ​வும், தமிழ்​நாடு கடல் போக்​கு​வரத்து உற்​பத்​திக் கொள்கை ஒன்றை அரசு அறி​முகப்​படுத்​தும். கப்​பல், படகு வடிவ​மைப்பு மற்​றும் கப்​பல் இயந்​திர உற்​பத்தி ஆகிய துறை​களில் முதலீடு மற்​றும் புத்​தாக்​கத்தை இக்​கொள்கை ஊக்​குவிக்​கும். இத்​தொழில் வருகை மூலம் கடலூர் மற்​றும் தூத்​துக்​குடி​யில் 30 ஆயிரம் வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்க முடி​யும்.

உயிரி தொழில்​நுட்​ப சூழலமைப்பை ஊக்​குவிக்​க​வும், உயி​ரியல் மருந்து மற்றும் நோய்த் தீர்​வியல் போன்ற வளர்ந்து வரும் துறை​களில் தமிழகத்தை முன்​னிலைப்​படுத்​த​வும் சென்​னைக்கு அரு​கில் அதிநவீன உயிர் அறி​வியல் பூங்​கா உரு​வாக்​கப்​படும்​.

x