டாஸ்மாக் முறைகேடு விவகாரம் | அமலாக்க துறை நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் - அமைச்சர் செந்தில் பாலாஜி


டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: ​டாஸ்​மாக் நிறு​வனத்​தில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​திருப்​ப​தாக தெரி​வித்​துள்ள அமலாக்​கத்​துறை​யின் நடவடிக்​கையை சட்டரீ​தி​யாக எதிர்​கொள்​வோம் என அமைச்​சர் செந்​தில் பாலாஜி தெரி​வித்​தார்.

தலைமை செயல​கத்தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: மும்​மொழி கொள்​கை, தொகுதி வரையறை பிரச்​சினையை மக்​கள் மத்​தி​யில் கொண்டு சென்​று, ‘தமிழ்​நாடு போராடும், தமிழ்​நாடு வெல்​லும்’ என்ற முதல்​வர் ஸ்டா​லினின் முழக்​கத்தை பொறுத்​துக் கொள்ள முடி​யாத மத்​திய அரசு, அமலாக்​கத்​துறையை ஏவி டாஸ்​மாக் நிறு​வனத்​தில் சோதனை நடத்தி இருக்​கிறது.

பல்​வேறு முதல் தகவல் அறிக்​கைகள், பல்​வேறு பிரிவு​களின்​கீழ் பதி​யப்​பட்ட புகாரின் அடிப்​படை​யில் இந்த சோதனை நடந்​த​தாக அமலாக்​கத்​துறை தெரி​வித்​துள்​ளது. ஆனால், எந்த முதல் தகவல் அறிக்​கை, எந்த ஆண்​டில் பதிவு செய்​யப்​பட்​டது என்ற விவரங்​கள் குறிப்​பிட்டு தெரிவிக்​கப்​பட​வில்​லை.

கடை பணி​யாளர்​களுக்​கு, அவர்​களின் குடும்ப சூழ்​நிலை, மருத்​து​வம் உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களுக்​காக பணி​யிட மாறு​தல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதில் எந்த தவறும் நடக்​க​வில்​லை. அதே​போல், டாஸ்​மாக் போக்​கு​வரத்து டெண்​டர் வெளிப்​படை தன்​மை​யுடன் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. அதில் எந்த முறை​கேடு​களுக்​கும், மாற்று கருத்​துக்​கும் இடமில்​லை. கேஒய்சி விவரங்​கள், வங்கி வரைவோலைகள் உள்​ளிட்ட விண்​ணப்​ப​தா​ரர்​களின் அனைத்து விவரங்​களும் சரி​பார்க்​கப்​பட்ட பின்பேடெண்​டர் இறுதி செய்​யப்​படுகிறது.

மது​பான கூடம் (பார்) டெண்​டர்​கள் முழு​வதும் ஆன்​லைன் மூல​மாகவே நடை​பெறுகிறது. இது​வரை ஆன்​லைன் மூலம் மது​பான கூட டெண்​டர்​கள் மூன்று கட்​டங்​களாக விடப்​பட்​டுள்​ளது. சட்​ட​வி​தி​களுக்கு உட்​பட்டே டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் டாஸ்​மாக் நிறு​வனத்​தின் வரு​வாய் அதி​கரித்​துள்​ளது.

மேலும், மது​பான உற்​பத்தி ஆலைகளுக்​கும், மது​பாட்​டில் தயாரிப்பு நிறு​வனங்​களுக்​கும் இடை​யில் பணப்​பரி​மாற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாகத் தெரி​வித்​திருக்​கும் குற்​றச்​சாட்​டு​கள், அந்த இரு நிறு​வனங்​களுக்​கும் இடையி​லானது. எனவே, இந்த பணப் பரி​மாற்​றங்​களை பயன்​படுத்தி டாஸ்​மாக் நிறு​வனத்​திடம் இருந்து கூடு​தல் கொள்​முதலை பெற்​ற​தாக தெரி​வித்​திருப்​பது ஏற்​கத்​தக்​கதல்ல.

ஒவ்​வொரு மது​பான வகையின் 3 மாத விற்​பனை அளவினை கணக்​கிட்​டும், அவற்​றுடன் கடைசி மாத விற்​பனை அளவை கணக்கிட்​டு, அதன்படி மது​பான கொள்​முதலுக்​கான உத்​தரவு பிறப்​பிக்​கப்​படு​கிறது. மது​பான கொள்முதலை பொறுத்​தவரை யாருக்கும் சலுகை காட்​ட​வில்​லை. எனவே, எந்த முகாந்​திர​மும் இல்​லாமல் டாஸ்​மாக் நிறு​வனத்​தில் ரூ.1.000 கோடி முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக அமலாக்​கத்​துறை கூறி​யுள்​ளது.

டாஸ்​மாக் நிறு​வனத்​தில் ரூ.1,000 கோடி முறை​கேடு என்​பதை முன்​ன​தாகவே பாஜக மாநில தலை​வர் அண்​ணா​மலை ஒரு பேட்​டி​யில் கூறுகிறார். அதைத்தொடர்ந்து, அமலாக்​கத்​துறையும் ரூ.1,000 கோடி முறை​கேடு என்று அறிக்​கை​யில் பதி​விட்டு கருத்தை முன்​வைக்​கிறது. இதில் ஆயிரம் அர்த்​தங்​கள் உள்​ளன. அமலாக்​கத்​துறை சோதனையை சட்​டரீ​தி​யாக எதிர்​கொள்​ள தயா​ராக இருக்​கிறோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

x