சிவகங்கை: சிங்கம்புணரி அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் மரியாதை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் பிரசித்தி பெற்ற மருது அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 18 ஆண்டுகளு க்கு முன்பு காளை கன்று நேர்த்திக்கடனாக விடப்பட்டது. அந்த காளைக்கு கொம்பன் என பெயர் சூட்டி, கிராம மக்கள் சிறப்பாக வளர்த்து வந்தனர். இக்காளை பல்வேறு மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், வயது முதிர்வால் காளை நேற்று உயிரிழந்தது. இதையடுத்து, அக்காளைக்கு கிராம மக்கள் வேட்டி, துண்டு, மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, கோயில் திடலில் இருந்து மேள தாளத்துடன் வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று, மருதிபட்டி ஊருணி அருகே காளையை அடக்கம் செய்தனர்.