'அக்னி வீரர்' தேர்வுக்கு ஆன்லைனில் ஏப்.10 வரை விண்ணப்பம்: திருச்சி, நெல்லை உள்ளிட்ட 16 மாவட்டத்தினருக்கு அழைப்பு!


திருச்சி: இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளுக்கான அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

இதற்கு திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், அக்னி வீரர் டிரேட்ஸ் மென் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில் www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

x