‘இளையராஜாவின் பெருமைக்கு மணிமகுடம்’ - அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த முதல்வர் அறிவிப்பு!


சென்னை: இசையமைப்பாளர் இளைய ராஜாவின் திரையிசைப் பயணத்தை பாராட்டி தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா வேலியன்ட் என்ற பெயரில் தனது முதல் சிம்பொனியை லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி வெற்றி கரமாக அரங்கேற்றினார். இதன்மூலம் இந்தியாவில் இருந்து சிம்பொனி இசையை எழுதி உலகளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

இதற்கிடையே லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலினை, இளைய ராஜா சென்னையில் நேற்று மாலை சந்தித்தார். அப்போது இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக தமிழக அரசுக்கு அவரும் நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலினை, இளைய ராஜா சென்னையில் நேற்று மாலை சந்தித்தார். அப்போது இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக தமிழக அரசுக்கு அவரும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதில் 'இளையராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறப்பாக நடத்தப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

x