திருக்கழுக்குன்றத்தில் எல்இடி திரையில் பட்ஜெட் தொடரை பார்த்த பொதுமக்கள்!


திருக்கழுக்குன்றத்தில் எல்இடி திரையில் பட்ஜெட் தொடரை பார்த்த பொதுமக்கள்

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை எல்இடி திரையில் பார்த்த பொதுமக்கள், இந்தாண்டுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் தங்கள் பகுதிக்கான திட்டங்களின் விவரங்கள் குறித்து உடனுக்குடன் அறிந்து கொண்டனர்.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விவரங்களை பொதுமக்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில், அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டது.

இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஏற்பாட்டில், எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது. இதில், சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பானது. இதனை, பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்துக்கான நின்றிருந்த பயணிகள், பெண்கள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலர் நேரடியாக பார்த்தனர்.

மேலும், பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் திட்டங்களை உடனடியாக அறிந்தும் மற்றும் தங்களுக்கு பகுதிக்கான திட்டங்கள் தொடர்பான விவரங்கள் வெளியானபோது, கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். மேலும், ஒவ்வொரு முறையும் இதேபோல், சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும் என தெரிவித்தனர்.

x