நில அளவீடு செய்ய ‘இ-சேவை' மையங்களில் விண்ணப்பிக்கலாம்: முழு விவரம்!


சென்னை: நில உரிமையாளர்கள் நில அளவீடு செய்ய இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து அவர், வெளியான செய்திக்குறிப்பில், "நில உரிமையாளர்கள் தற்போது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் இனி நேரில் செல்லாமல், https:tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய வசதியினை தமிழக அரசு 2023-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்தநேரத்திலும், நிலஅளவவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தற்போது, இந்த சேவையானது அனைத்து பொது சேவை (இ-சேவை) மையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, பொது சேவை மையங்களை அணுகி நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். மேலும், நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது கைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவை கையொப்பம் அறிக்கை/ வரைப்படம், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். தொடர்ந்து, மனுதாரர் htttps//eservices .tn.gov.in/ என்ற இணையவழி சேவை மூலமாக அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x