ரூ.5 கோடி கடன் தொல்லை; சென்னை திருமங்கலத்தில் மருத்துவர், மனைவி மற்றும் இரு மகன்களுடன் தற்கொலை


சென்னை: ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருமங்கலத்தை சேர்ந்த மருத்துவர் பாலமுருகன். அவரது மனைவி சுமதி மற்றும் இரண்டு மகன்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (52). இவரது மனைவி சுமதி(47) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் குடும்பத்தினர் 4 பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பெற்றோருடன் சேர்ந்து மகன்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் பாலமுருகன் ரூ.5 கோடிக்கும் மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

x