இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது போர்குணத்தோடு காப்பாற்றியிருக்கலாமே? - முதல்வருக்கு தமிழிசை கேள்வி


சென்னை: நீங்கள் கூட்டணியில் ஆட்சியில் இருக்கும் பொழுது தான் இலங்கையில் நம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உங்கள் போர் குணத்தோடு தமிழுக்கு, தமிழர்களுக்கு எதிரான அந்த போரை நிறுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் சொந்தங்களை காப்பாற்றி இருக்கலாம் அல்லவா? உங்கள் போர் குணம் எங்கே போனது? என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே.. மரியாதைக்குரிய தர்மேந்திர பிரதான் அவர்கள் பெருந்தன்மையோடு தான் தவறாக பேசவில்லை என்றாலும், யார் மனதாவது புண்பட்டிருந்தால் நான் வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன் என்றார். இதற்கு நீங்கள் இதை நடத்தி காண்பித்தது தமிழக எம்பிக்களின் போர்குணம் என்கிறீர்கள்...

ஒன்றை மன வேதனையுடன் நினைவு படுத்துகிறோம். நீங்கள் கூட்டணியில் ஆட்சியில் இருக்கும் பொழுது தான் இலங்கையில் நம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உங்கள் போர் குணத்தோடு தமிழுக்கு, தமிழர்களுக்கு எதிரான அந்த போரை நிறுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் சொந்தங்களை காப்பாற்றி இருக்கலாம் அல்லவா.. உங்கள் போர் குணம் எங்கே போனது. எல்லாமே உங்கள் அரசியல் நாடகம்’ எனத் தெரிவித்தார்

x