பிஎஸ்என்எல் ஃபேன்சி மொபைல் எண்கள் மின்னணு ஏலம் மூலம் விற்பனை: பெறுவது எப்படி?


சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1,864 மொபைல் ஃபேன்சி எண்கள் மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபேன்சி மொபைல் எண்களை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. இதன்படி, இந்த ஏலத்தில் 1,864 ஃபேன்சி மொபைல் எண்கள் விற்பனை செய்யப்படுகிறது. மின்னணு முறையில் நடைபெறும் இந்த ஏலம் கடந்த 8-ம் தேதி தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிஎஸ்என்எல் இணையளத்தின் மூலம் அனைவரும் ஏலத்தில் பங்கேற்கலாம்.

வியாபாரிகளுக்கு இந்த ஃபேன்சி மொபைல் எண்கள் தங்களது வியாபாரத்தை பெருக்க உதவும். தனி நபர்களுக்கு இந்த எண்கள் ஒரு பெருமையாகவும், எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் இருக்கும் என, பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

x