தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோ.சாமித்துரை தலைமையில் அக்கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
அதில், ”தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர்கள் நியமன விவகாரம் தொடர்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாதனை தரக்குறைவாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அறங்காவலர் கள் நியமனத்துக்கும், முன்னாள் மாவட்ட செயலாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.