ஓசூர்: தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தளி எம்எல்ஏ ராமசந்திரன் தலைமையில் 5 ஆயிரம் பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டம் மற்றும் நகரம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தளி எம்எல்ஏ ராமசந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
முன்னதாக கம்யூனிஸ்ட் அலுவலகத்திலிருந்து அஞ்செட்டி சாலை வழியாக பேரணியாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது தேன்கனிக்கோட்டை மற்றும் அதன்சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள குடியிருக்கும் வீடுகளுக்கு பல ஆண்டுகளாகியும், வீட்டுமனை பட்டா வழங்காத நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளதை அமல்படுத்த வலியுறுத்தியும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் வழங்கக்கோரியும், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில் வனத்தையொட்டி உள்ள நிலங்களில் வளர்ச்சி பணிகள் செய்யக்கூடாது என வனத்துறையினர் சட்டமாக்குவதை கண்டித்தும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமையா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.