குன்னூரில் சோகம்: சேம்பக்கரை ஆதிவாசி கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு


குன்னூர்: குன்னூர் சேம்பக்கரை ஆதிவாசி கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட சேம்பக்கரை ஆதிவாசி கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயகுமார்(30). அவரும், அவரது மனைவி சுந்தரியும் நேற்று மாலை குன்னூர் நகரப்பகுதியில் இருந்து உணவுப் பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் ஆடர்லி பேரூந்தில் சென்று, அங்கிருந்து சுமார் 3 கிமீ நடந்து சென்றப்போது மறைந்திருந்து யானை தாக்கியதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று காலை பேரூந்துக்கு வந்தவர்கள் பார்த்து குன்னூர் வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவளின் அடிப்படையில் வனத்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

x