’தல மாஸ்’ - வேட்டி சட்டையுடன் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்தது சிஎஸ்கே!


சென்னை: இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, வேட்டி சட்டையுடன் உள்ள படத்தை பகிர்ந்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில், 'சாரே தல மாஸ்ஸு’ என தெரிவித்து தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 226 போட்டிகளில் வழிநடத்திய மகந்திரசிங் தோனி, அதில் 133 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து, 5 முறை கோப்பை வென்ற கேப்டனாகவும் திகழ்ந்து வருகிறார்.

சிஎஸ்கே அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தோனியே கேப்டனாக இருந்தார். இடையிடையே சில போட்டிகளில் ரெய்னா கேப்டனாக இருந்துள்ளார். அடுத்ததாக 2022 சீசனில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த சீசனிலேயே தோனி மீண்டும் கேப்டன்ஸியை பெற்றார். இதனையடுத்து 2023இல் சிஎஸ்கேவுக்கு 5வது கோப்பையை பெற்றுக்கொடுத்தார். கடந்த முறை கெய்க்வாட்டை கேப்டனாக்கினார் தோனி. இருப்பினும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார் தோனி. இந்த முறையும் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று நம்புகின்றனர் சென்னை ரசிகர்கள்

x