தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி


சென்னை: மத்​திய சென்னை மக்​களவை தொகு​தி​யில் தயாநிதி மாறன் வெற்றி பெற்​றதை எதிர்த்து தொடரப்​பட்ட தேர்​தல் வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2024 மக்​களவை தேர்​தலில் மத்​திய சென்னை தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிட்ட தயாநிதிமாறன் வெற்றி பெற்​றார். அவர்வெற்றி பெற்றது செல்​லாது என அறிவிக்க கோரி, அந்த தொகு​தி​யில்தேசிய மக்​கள் சக்தி கட்சி சார்​பில் போட்​டி​யிட்ட வழக்​கறிஞர் எம்​.எல்​.ர​வி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில்தேர்​தல் வழக்கு தொடர்ந்​தார்.

அதில்,மத்​திய சென்னை தொகு​தி​யில் தேர்​தல் நியாய​மாக​வும், நேர்​மை​யாக​வும் நடக்​காத​தால், தயாநிதி மாறன் வெற்றிபெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. தயாநிதி மாறன் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் டி.மோகன், வழக்​கறிஞர் எம்​.சினேகா ஆகியோ​ரும், வழக்கு தொடர்ந்த எம்​.எல்​.ரவி தரப்​பில் வழக்​கறிஞர் சிவ​ஞானசம்​பந்​தனும் ஆஜராகி வாதிட்​டனர்.
இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ், தயாநிதி மாறனுக்கு எதி​ரான வழக்கை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

x