விளையாடியபோது விபரீதம்: ராணிப்பேட்டையில் குளத்தில் மூழ்கி 1ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு


ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி 1-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருப்பதி. இவரது மகன் கமலேஷ் (6). இவர், அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கமலேஷ் அதே பகுதியில் உள்ள குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி குளத்தில் விழுந்து நீரில் முழ்கினார்.

இதையறிந்த அக்கம்,பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் குளத்தில் இறங்கி கமலேஷை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த சிறுவன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராமிய காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

x