'எண்ணமெல்லாம் வண்ணமம்மா’ - குன்னூரில் பலவித ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்திய ஓவியர்கள்!


குன்னூர்: குன்னூரில் பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த ஓவியர்கள் பலவிதமான ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தினர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 15 கைதேர்ந்த ஓவியர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மற்றும் லண்டனில் இருந்து பர்வத் நீலகிரி ஓவிய அமைப்பு ஷோபா பிரேம்குமார் ஏற்பாட்டில் உயரமான மலைபகுதியில் இந்த ஓவிய நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு குறிப்பாக நீர் வர்ணம், ஆயில் வர்ணம், கேன்வாஸ், பேப்பர் மற்றும் பெயின்ட் பிரஷ்களை உபயேகப்படுத்தி 5 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து துல்லியமான கடவுள் உருவங்கள், இயற்கை காட்சிகள், சோலை வனங்கள் மற்றும் ஜல்லிகட்டு காளைகளை ஓவியர்கள் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து காட்சிபடுத்தினர்.

இது குறித்து ஓவியர்கள் கூறும் போது, ‘பல்வேறு நாடுகளுக்கு சென்று ஓவியங்கள் வரைந்தாலும், இயற்கை சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தில் அமைதியான இடத்தில் வரைந்தது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. எனவே, வருடம் வருடம் ஓவியர்கள் வரவழைக்கபட்டு, ஓவியங்கள் வரைந்தால் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒருவாய்ப்பாக அமையும்’ என்றனர்.

x