சீமான் பாதுகாவலரின் ஜாமீன் மனு தள்ளுபடி


செங்கல்பட்டு: ​நாம் தமிழர் கட்சி ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் ஒட்​டப்​பட்ட சம்​மனை கிழித்​த​தாக அவரது பணி​யாளர் சுபாகர், பாது​காவலர் அமல்​ராஜ் ஆகியோரை நீலாங்​கரை போலீ​ஸார் கைது செய்​தனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்​.28-ம் தேதி செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் இரு​வருக்​கும் ஜாமீன் கேட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

நேற்று அமல்​ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசா​ரணை நடை​பெற்ற நிலை​யில் இரு​வருக்​கும் ஜாமீன் வழங்க மறுத்​து, மனுவை தள்​ளு​படி செய்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

இதையடுத்து நாம் தமிழர் கட்​சி​யின் வழக்​கறிஞர் பிரி​வினர் இரு​வருக்​கும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு மனு​தாக்​கல் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளனர். முன்​ன​தாக ஒரு வழக்​கில் மட்​டும் சோழிங்​கநல்​லூர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே இரு​வருக்​கும் ஜாமீன் வழங்​கி​யிருந்​தது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

x