கேளம்பாக்கம்: புதுப்பாக்கம் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 'அறிவு சார் சொத்துரிமை சட்டவியலின் பரிமாணங்கள், தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் இதன் நுணுக்கங்கள்' என்ற தலைப்பில், ஒருநாள் தேசிய கருத்தரங்கம் 5-ம் தேதி நேற்று நடந்தது.
கல்லூரி முதல்வர் ஜெயகவுரி தலைமையில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக வருமான தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, முன்னாள் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி ஆகியோர் பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.
இதில் முதல் மற்றும் இரண்டாவது அமர்வில் பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று உரையாற்றினர். இறுதி அமர்வில், தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குநர் விஜயலட்சுமி பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். மேலும், 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். அதில் சிறந்த சட்ட ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.