அதிமுக மூத்த நிர்வாகியை கன்னத்தில் அறைந்த முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: நடந்தது என்ன?


விருதுநகர்: நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்திய அதிமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அரைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினர். அப்போது, கட்சி நிர்வாகிகள் பலரும் மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாபா. பாண்டிய ராஜன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

அப்போது, விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் (52) பொன்னாடை அணிவிக்க வந்தார். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து விட்டு, அருகே அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டிய ராஜனுக்கும் பொன்னாடை அணிவிக்க அவர் அருகில் சென்றார். அப்போது, திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி "யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாது" என கேட்டவாறு நந்தகுமார் கன்னத்தில் அரைந்தார். இதனால் மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

x