திருச்சி: சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமானம் புறப்படுவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் 164 பேரும் இறக்கப்பட்டு, பயணிகள் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், தொழில்நுட்ப குழுவினர் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு சரி செய்யப்பட்டு, 8 மணி நேரம் தாமதமாக காலை 11.20 மணிக்கு சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டது.