ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,500 கனஅடியாக உயர்வு  


தருமபுரி / மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 1-ம் தேதி காலை விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 2-ம் தேதி காலை 1,200 கனஅடியாக உயர்ந்தது. தொடர்ந்து 3 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாகவே நீடித்த நிலையில் நேற்று காலை1,500 கனஅடியாக உயர்ந்தது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 425 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 575 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 109.42 அடியாகவும், நீர் இருப்பு 77.58 டிஎம்சியாகவும் இருந்தது.

x