நாகப்பட்டினம்: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிளி ஜோதிடம் பார்ப்பது என்பது அதிகளவில் இருந்து வந்தது. வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, பட்டியலிடப்பட்ட உயிரினங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கிளி ஜோதிடத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கிளி ஜோதிடம் பார்த்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கிளிக்கு மாற்றாக எலியை வைத்து ஜோதிடம் சொல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, கிளிகளுக்கு பயிற்சி அளித்து ஜோதிடம் சொன்னது போல, தற்போது ஜோதிடர்கள் கினி என்னும் வகையான எலிக்கு தங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்து, பயிற்சி அளித்து ஜோதிடம் சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதிக்கு வந்துள்ள, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் கிளிக்கு பதிலாக சீமை எலி மற்றும் பறவைகளை வைத்து ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் கிளி ஜோதிடம் போல இதற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை, மக்கள் ஆர்வத்துடன் ஜோதிடம் பார்க்க வருவதில்லை எனவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஜோதிடர்கள் வேதனை தெரிவிக்
கின்றனர். எனவே, கிளி ஜோதிடம் பார்க்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.